#BREAKING: இனி திரையரங்குகளில்.. இது இலவசம்.. இதற்கு அனுமதி.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் வழக்கறிஞர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வெளியில் இருந்து குளிர்பானங்கள், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல திரையரங்குகள் அனுமதி மறப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதியான சந்திர சூட் மற்றும் நரசிம்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், "திரையரங்குகளில் வரும் பொது மக்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இதர உணவுகளை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ,"திரையரங்கை பொறுத்தவரை தனியாருக்கு சொந்தமான இடம் அந்த இடத்தில் என்ன விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பதை அதன் உரிமையாளர்கள் தான் முடிவெடுப்பார்கள். இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட முடியாது. 

ஆகவே உணவு பொருட்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்க திரையரங்கு உரிமையாளர்களுக்கு உரிமை உள்ளது." என்று தெரிவித்துள்ளனர் அதுபோல குழந்தைகள் சிறுவர்களுக்கு உணவு எடுத்துச் செல்ல பெற்றோர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று திரையரங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court order about theatre


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->