இந்து என்பது மதம் அல்ல; வாழ்வியல் நெறிமுறை.. உச்ச நீதிமன்றம் கருத்து..!! - Seithipunal
Seithipunal


இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள "முகல் கார்டன்" அண்மையில் "அம்ரித் உத்யன்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதேபோன்று நம் நாட்டில் பல பழமையான வரலாற்று சிறப்புமிக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல இடங்கள் இன்னும் வெளிநாட்டினரால் அவர்களுடைய வேலைக்காரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலேயே உள்ளன. 

இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள பல உரிமைகளுக்கு எதிரானது. எனவே வெளிநாட்டு ஊடுருவல்காரர்களால் மாற்றப்பட்ட பெயர்களை அதன் உண்மையான பெயரில் மாற்றுவதற்காக ஒரு ஆணையத்தை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். பல இடங்களில் அசல் பெயர்களை கண்டறிந்து வெளியிடுமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம் ஜோசப் மற்றும்  நாகரத்தினம் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் பொழுது "இந்தியா மதச்சார்பற்ற நாடு, நீதிமன்றமும் மதச்சார்பற்ற அமைப்பு அரசியல் சாசனத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. 

இந்து என்பது மதம் அல்ல. அது வாழ்வியல் நெறிமுறை, அதனால் தான் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். கடந்த கால வரலாறுகளை தோண்டாதீர்கள். அவ்வாறு தோண்டினால் நாட்டின் ஒற்றுமை சீர்குலையும். மக்களைப் பிரித்து ஆட்சி செய்வது பிரிட்டிஷ்காரின் கொள்கை. அந்த நிலையை மீண்டும் உருவாக்க கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள். அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court opined Hinduism is not a religion its code of life


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->