பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம்!! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்மபூமி பாபர் மசூதி என அங்கு ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து, அந்த பகுதியை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு தன் வசம் பெற்றது, அந்த நிலங்களை அதன் உண்மையான உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைக்க அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்மபூமி பாபர் மசூதி பகுதியான 2.77 ஏக்கர் நிலப்பகுதியைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களிடம் இருந்து மத்திய அரசு கடந்த ஆண்டு வாங்கியது

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா உள்ளிட்ட 3 அமைப்புகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த மார்ச் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழுவை நியமித்தது. இக்குழுவில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

இக்குழு கடந்த மே 6ம் தேதி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது, பாபர் மசூதி இடிப்பு, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் இன்னும் 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court judgement about ayothi issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->