பிரதமருக்கும், இஸ்ரோ குழுவினருக்கும் நன்றி.. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இஸ்ரோ தலைவருடன் உரையாடிய சுபான்ஷூ சுக்லா...! - Seithipunal
Seithipunal


சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் சக இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது அவர், இஸ்ரோ குழுவினருக்கு உணர்ச்சிபூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.

 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'டிராகன்' விண்கலம் வாயிலாக, 'ஆக்சியம் மிஷன் 4' திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இதில் சுபான்ஷு சுக்லா, ஆக்சியம் 04 திட்டத்தின் சக உறுப்பினர்களான நாசா விஞ்ஞானி பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோருடன் இணைந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சுபான்ஷு சுக்லா, விண்வெளி நிலையத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் சக இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் தொலைபேசியில் உரையாடிய போது, விண்வெளிக்கு தனது பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான பயணத்தை சாத்தியமாக்கியதற்காக இஸ்ரோ குழுவினருக்கு சுக்லா நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், விண்வெளி நிலையத்தில் சுக்லாவின் ஆய்வு, இந்தியாவின் ககன்யான் திட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் இந்த பணிக்குப் பிறகு அனைத்து நடவடிக்கைகளையும், கவனமாக ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இஸ்ரோ தலைவர் நாராயணன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த இந்த வாய்ப்பை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு இந்திய விண்வெளி வீரர் சுக்லா நன்றியை தெரிவித்துள்ளார். இதனை இஸ்ரோ தெரிவித்துள்ளது. அத்துடன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, வெற்றிகரமான பயணத்திற்கு உதவிய இஸ்ரோ தலைவர் மற்றும் குழுவினரின் முயற்சிகளை சுக்லா பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும், விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் மற்றும் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார் அத்துடன், அறிவியல் ஆய்வுகளின் போது எதிர்கொள்ளும் சவால்களை சுக்லா எடுத்துரைத்ததாக இஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Subhanshu Shukla talks to ISRO chief from the International Space Station


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->