புறாவை பிடிக்க சென்ற போது விபரீதம்.! மின்சாரம் தாக்கி மாணவன் பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் புறாவை பிடிக்க சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நந்தினி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விஜயானந்தநகர் பகுதியை சேர்ந்த சுப்ரீத்(11) அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இவரும், இவரது நண்பன் சந்தன் என்ற சந்துரு (10) கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் இருந்த புறாவை பிடிக்க சென்று உள்ளனர்.

அப்பொழுது அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து உயிர் அழுத்த மின்கம்பியில் உட்கார்ந்து இருந்த புறாவை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் இரும்பு கம்பி மின்கம்பியில் பட்டதால் இரண்டு பேரும் மின்சாரம் தாக்கி வளர்த்த காயம் அடைந்தனர்.

இதையடுத்து இவர்கள் இரண்டு பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சுப்ரீத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவன் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றான்.

மேலும் இந்த சம்பவம் குறித்து நந்தினி லே-அவுட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student killed by electrocution in Karnataka


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->