மது மோசடி கடும் உத்தரவு ! தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் நீக்கம்! - சந்திரபாபு நாயுடு
Strict orders against liquor scamTelugu Desam Party executives removed Chandrababu Naidu
ஆந்திர மாநிலத்தின் அன்னமய்யா மாவட்டம் முலக்கலச்செருவு பகுதி தற்போது கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இங்கு தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் ரகசியமாக போலி மதுபானம் தயாரித்து, விற்பனை செய்து வந்தது காவலர்களின் சோதனையில் வெளிச்சம் கண்டுள்ளது.
இந்த கடும் குற்றச்சாட்டில் ராஜேஷ், ஸ்ரீனிவாச ராவ் , ஜனார்தன் ராவ், கோட்டராஜு ஆகியோர் கைது செய்யப்பட்டு காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் வெளிவந்ததுடன், ஆந்திர அரசியலில் அதிர்வலை எழுந்தது. மேலும், கட்சியின் கண்ணியத்தை காப்பாற்றும் நோக்கில், முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, குற்றத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கி, கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Strict orders against liquor scamTelugu Desam Party executives removed Chandrababu Naidu