ரைட்டு... ஆண்களை விட 9 மாதங்கள் கூடுதல் ஆயுளோடு பெண்கள் வாழும் மாநிலம் எது தெரியுமா?!
State where women live 9 months longer than men
இந்தியாவில் இந்த ஒரு மாநிலத்தில் மட்டும் ஆண்களை விட, பெண்கள் சராசரியாக 9 மாதங்கள் கூடுதல் ஆயுளோடு வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அது எந்த மாநிலம் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
நம் இந்திய நாடு முழுவதும் உயிரிழக்கும் ஆண் மற்றும் பெண்களின் வயது விவரங்களை அலசி ஆராய்ந்து, இந்திய புள்ளியியல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில், ஒரு மாநிலத்தில் மட்டும் ஆண்களை விட, பெண்கள் சராசரியாக 9 மாதங்கள் கூடுதல் ஆயுளோடு வாழ்வதாக அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அது வேறு எந்த மாநிலமும் இல்லைங்க., பிகார் மாநிலத்தில் தான் பிறக்கும் ஆண்களின் சராசரி ஆயுள் 68.8 வருடங்களாக இருப்பதாகவும், பெண்களின் சராசரி ஆயுள் 69.6 வருடங்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியாக, பிகார் மாநிலத்தில் ஆண்களை விடவும் பெண்கள் 9 மாதங்கள் கூடுதலாக ஆயுளைக் கொண்டிருப்பதாக அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையே நாடு முழுவதும் எடுத்துக்கொண்டால், பெண்களின் சராசரி ஆயுள் 71.1 வருடங்களாகவும், ஆணின் சராசரி ஆயுள் 68.4 வருடங்களாகவும் இருப்பதாக அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியில் ஒரு மனிதனின் சராசரி ஆயுள் 75.9 வருடங்களாக உள்ளது என்றும் அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
State where women live 9 months longer than men