இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்ய இலங்கை முடிவு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்ய இலங்கை முடிவு.!

கடந்த ஓராண்டாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. சா்வதேச நிதியம் மற்றும் இந்தியாவின் உதவியுடன் இலங்கை இப்போது படிப்படியாக மீளும் முயற்சியில் உள்ளது. அதனால், உணவுப் பொருள்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை இலங்கையில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசு இந்தியாவில் இருந்து நாள்தோறும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள ஐந்து பெரிய பண்ணைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது குறித்து, இலங்கை அரசின் வா்த்தக நிறுவனத்தின் தலைவா் அசிரி வாலிசுந்தரா தெரிவித்ததாவது, "இந்தியாவில் இருந்து நாள்தோறும் 10 லட்சம் என்ற அளவில் இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் 10 கோடி முட்டைகள் பொதுச் சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்படும். 

தேவைக்கு ஏற்ப அடுத்த கட்ட இறக்குமதி குறித்து முடிவெடுக்கப்படும். பேக்கரி, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள், சமையல் ஒப்பந்த நிறுவனங்கள், உணவு விடுதிகளுக்கு ஒரு முட்டை இலங்கை ரூபாயில் ரூ.35 என்ற விலையில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri langa govt decided import eggs from india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->