இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகரை தாக்கிய எம்.எல்.ஏ.! மேடையிலேயே தகராறு.!  - Seithipunal
Seithipunal


பிரபல பாடகர் சோனு நிகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிரபல பாடவராக இருந்து வருபவர் சோனு நிகம். நேற்று இரவு சோனு நிகம் மும்பையில் அமைந்துள்ள செம்பூர் வட்டாரத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அந்த இசை நிகழ்ச்சிக்கு சிவசேனா கட்சியின் எம்எல்ஏவான பிரகாஷ் என்பவரும் அவருடைய சில நண்பர்களும் வந்துள்ளார்கள். இவர்களில் சிலர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து மேடையில் ஏறி பாடகர் சோனு நிகமுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கூறி முயற்சித்துள்ளனர். அவர்கள் போதையில் இருந்ததால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து அவர்கள் தகராறு ஏற்பட்டு மேடையில் இருந்த சோனு மீது தாக்குதல் நடத்தியதில் பாடவருக்கு பயங்கர காயங்கள் ஏற்பட்டன. இதை எடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sonu Nigam attacked by Shivsena MLA Prakash in Mumbai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->