ஜெய்ப்பூர் சென்ற சோனியா காந்தி: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பியும் இவரது மகனுமான ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு சென்றனர். 

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு பாட்டில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளரிடம் சோனியா காந்தியின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அவர், டெல்லியில் காற்று மாசு நிலவுவதால் தனிப்பட்ட பயணம் ஆக சோனியா காந்தி ஜெய்ப்பூர் வந்ததாக தெரிவித்துள்ளார். 

மேலும், காங்கிரஸ் தலைவர்கள் ராஜஸ்தானில் ஒற்றுமையுடன் உள்ளனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெல்வது உறுதி எனவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே உடல் நல பிரச்சனை காரணமாக சோனியா காந்தி 4 நாள் பயணமாக ஜெய்பூருக்கு வந்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.

வருகின்ற 25ஆம் தேதி காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் 200 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia Gandhi shift Jaipur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->