இரு தரப்பை அழைக்கும் சோனியா! பேச்சு வார்த்தை வெற்றி பெருமா? - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் காங்கிரஸில் இரு அணிகளாக பிரிந்துள்ள எம்எல்ஏக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த டெல்லிக்கு அழைத்துள்ளார் சோனியா!

காங்கிரஸ் கட்சியின் புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நேரு குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிட விருப்பமில்லை என தெரிவித்து விட்டனர். 

இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இவர் நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசி என்பதால் காங்கிரஸ் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் "ஒருவருக்கு ஒரு பதவி" என்ற அடிப்படையில் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. இதனால் ராஜஸ்தானின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் சூழல் காங்கிரஸ் கட்சிக்கு உருவாகியுள்ளது. 

இதனை நேற்று அசோக் கெல்ட் அளித்த பேட்டியில் "40 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சாசன பதவிகளை வகித்து விட்டேன். இப்பொழுது புதிய தலைமுறையினர் வாய்ப்பை பெற வேண்டும் என்பதே எனது எண்ணம்" என்று சூசகமாக தெரிவித்தார்

இதன் காரணமாக மாநிலத்தின் அடுத்த முதல்வர் ஆவதற்கு சச்சின் பைலட் தீவரம் காட்டி வருகிறார். ஆனால் அவருக்கு 20 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 80 பேர் சச்சின் பைலட் முதல்வராவதை தீவிரமாக எதிர்கின்றனர். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. 

இந்நிலையில் ஆட்சி அமைப்பு விவகாரத்தில் இரு தரப்பு எம்எல்ஏக்களையும் டெல்லி வருமாறு சோனியா அழைத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டால் அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவராக அசோக் கெலாட் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia calls both parties in Rajasthan congress Is speech success great


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->