சோகம்.. குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி.!
six school students died for drowned water in andira
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டம் அஸ்பரி மண்டல் கிராமத்தில் உள்ள குட்டைக்கு அதே கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 7 பேர் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லாமல் இன்று குளிக்க சென்றுள்ளனர்.
இவர்களில் 6 பேர் குட்டையில் குளித்த நிலையில் ஒரு மாணவன் மட்டும் கரையில் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக குட்டையில் குளித்துக்கொண்டிருந்த 6 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி மயமாகியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவன் கிராமத்திற்கு சென்று தகவல் கொடுத்துள்ளார்.

உடனே கிராமத்தினர் விரைந்து சென்று குட்டையில் மூழ்கிய 6 மாணவர்களையும் மீட்க முயற்சித்தனர். ஆனால், தண்ணீர் மூழ்கி 6 மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
six school students died for drowned water in andira