பிரதமரை சந்திக்க உள்ள சித்தராமையா: இதுதான் காரணம்! - Seithipunal
Seithipunal


புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நாளை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு நிவாரண நிதியை வலியுறுத்தி கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, 'நாளை காலை 11 மணி பிரதமரை சந்திப்பதற்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே நாளை புதுடெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வறட்சி குறித்து பேச உள்ளேன். மேலும் புதுடெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் அதிலும் பங்கேற்க உள்ளேன். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக விவாதிக்க உள்ளோம்' என தெரிவித்துள்ளார். பலமுறை கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தி மத்திய அரசின் குழு நேரில் பார்வையிட்ட பின்பு நிவாரண நிதியை விடுவிக்காதது தொடர்பாக பா.ஜ.க அரசை சித்தராமையா கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. 

கர்நாடகாவில் உள்ள 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah meet Prime Minister 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->