#கர்நாடகா:: பகுத்தறிவும் இல்லை சித்தாந்தமும் இல்லை.. முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள மாகடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர் "பாஜக என்னை குடியரசு தலைவராகவும் பிரதமராகவும் ஆக்கினாலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் நான் செல்ல மாட்டேன். எனது சடலம் கூட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் செல்லாது. 

மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் மற்ற கட்சிகள் பாஜகவுடன் இணைந்து கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும். மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு எந்த சித்தாந்தமும் இல்லை, பகுத்தறிவும் இல்லை. அதிகாரத்திற்காக யாரோடு வேண்டுமானாலும் செல்வார்கள்.  இந்து விரோதியாக சித்தரிக்க பாஜகவின் சி.டி ரவி என்னை சித்ரமுல்லா கான் என்று தான் அழைக்கிறார். உண்மையான இந்து காந்தியை கொன்ற கோட்சேவை வணங்கும் இந்துக்கள் தான் அவர்கள்.

நான் முதல்வராக இருந்த பொழுது ஒவ்வொரு மணி நேரமும் உணவு, விவசாயம் மற்றும் பால் வளம் என அனைத்தும் பாதுகாக்கப்பட்டது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஏழை மக்களுக்கு நான் 7 கிலோ இலவச அரிசி கொடுத்ததை தற்பொழுது 5 கிலோவாக பாஜக அரசு குறைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்குவோம். இதன் மூலம் ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த பணம் அனைத்தும் எங்களுடையது அல்ல மக்களின் வரிப்பணம், சரியான மக்களை சென்றடைய வேண்டும்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah accused JDS does not have logic and ideology


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->