ஏ.டி.எம் மற்றும் கிரடிட் கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சியான தகவல்.! உஷார் மக்களே.! - Seithipunal
Seithipunal


13 லட்சம் இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள் குறித்த அனைத்து விவரங்களும் விற்பனையாகி உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விற்பனை செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் வங்கிகளின் வழியாக திருடப்பட்டுள்ளதாக ஸிடிநெட் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள் பயன்படுத்தும் ஒவ்வொரு கார்டுகளின் விபரங்களும் கிட்டத்தட்ட 100 டாலர்கள் மதிப்பில் விற்பனை செய்யப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கார்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கிம்மர் கருவிகள் மூலமாகவோ அல்லது பாயின்ட் ஆப் சேல் மூலமாகவோ சில குறிப்பிட்ட இணையதளங்களுக்கு விவரங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஜோக்கர் ஸ்டாஷ் என அழைக்கப்படும் ஒரு இருண்ட வலைத்தள சந்தையில் இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் விற்பனைக்கு வந்த பிறகு இந்த பாதுகாப்பு மீறல் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்களின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள் விபரங்கள் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shock news for credit and debit card users


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal