இரண்டாம் கட்ட வேட்பு மனுத் தாக்கல் எப்போது? - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கான அரசிதழ் அறிக்கை இன்று வெளியிடப்படும். 88 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு 26.04.2024 அன்று நடைபெறும். முதல் கட்டத்திற்கான அரசிதழ் அறிவிப்பில் மணிப்பூருக்கு வெளியே உள்ள பகுதிகளின் தேர்தலுக்கான அறிவிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதில், மணிப்பூர் மக்களவையின் 15 சட்டப்பேரவை தொகுதிகளில் 19.04.2024 அன்று தேர்தல் நடைபெறும். இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மற்றொரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அதில், 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 26.04.2024 அன்று தேர்தல் நடைபெறும்.

இந்தத் தேர்தலில் அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 6 அன்று கடைசி நாளாகும். ஜம்மு-காஷ்மீர் தவிர, 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 5 அன்று நடைபெறும். ஜம்மு-காஷ்மீரில் வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 6 அன்று நடைபெறும் enbathu குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

second stage nomination file date announce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->