பாஜகவுக்கு இவர்தான் உதவி செய்ய வேண்டும்.. மோடி மீது சாம்னா குற்றசாட்டு..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரும் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை தக்கவைப்பதற்க்காக ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. 

நேற்று மாலையுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் அனைத்து கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு பணியாற்றினார். 

இந்தநேரத்தில், டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக கூடுதலான இலக்கங்களை கடந்த வருடத்தை விட அதிகமாக பெற ஸ்ரீ ராமர் உதவி செய்யட்டும் என்று சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகை கூறியுள்ளது.

டெல்லியில் இருக்கும் 70 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு நான்கு நாட்கள் முன்னர் பேசிய மோடி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளையை அறிவித்திருந்தார். 

இந்த தேர்தலை மையமாக வைத்தே மோடி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக இடத்தை பெற ஸ்ரீ ராமர் உதவட்டும் என்றும் சாம்னா கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samna press speech about modi sriram temple announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->