நெருங்கும் தேர்தல்... தேர்தல் அதிகாரிகள் முதல் வாக்குச்சாவடி அதிகாரிகள் வரை ஊதியம் உயர்வு.!!
salary increased election officers and polling officers
வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கு தேர்தல் பதிவு அதிகாரிகள், உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகளின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
அதனால், தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான வருடாந்திர ஊதியத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது. இதேபோல், வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துவதில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் ஊதியத்தையும் உயர்த்தியுள்ளது.

மேலும், முதல் முறையாக தேர்தல் பதிவு அதிகாரிகள், உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு கௌரவ ஊதியம் வழங்கப்படவுள்ளது. வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியமான ரூ 6,000, ரூ 12,000 ஆக உயர்த்தப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான ஊக்கத்தொகை ரூ 1000-லிருந்து, ரூ 2000 ஆக உயர்த்தப்படுகிறது.
வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ12,000-லிருந்து ரூ 18,000 ஆக உயர்த்தப்படுகிறது. தேர்தல் பதிவு மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு முறையே ரூ30,000 மற்றும் ரூ 25,000 என மதிப்பூதியம் முதல் முறையாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், பீகாரில் இருந்து தொடங்கும் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு ரூ. 6,000 சிறப்பு ஊக்கத்தொகையையும் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
English Summary
salary increased election officers and polling officers