சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு....! சபரிமலையில் விதிக்கப்பட்ட புதிய தடை.!  - Seithipunal
Seithipunal


அறநிலையத்துறை முதன்மை செயலாளர் க.பணீந்திர ரெட்டி, ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர், "சபரிமலையில் உள்ள நிலக்கல் அல்லது எருமேலி பகுதிகளுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். 

மேலும் இத்தகவலை பகிர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் கொண்டு வராமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் கேரள அரசு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார். 

எனவே, வரும் நவம்பர் 16ம் தேதி முதல் சமரிமலை ஐயப்ப கோவிலில் நடைதிறக்கப்பட உள்ளதால், அங்கு செல்லும் தமிழக பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் எனவும், பக்தர்கள் உடுத்தி செல்லும் ஆடைகளை பம்பை நதியில் களைவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sabarimalai bakthas alert new announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->