12 நாட்களில் சபரிமலையில் வருமானம் இத்தனை கோடிகளா.? வாய்பிளக்க வைக்கும் நிலவரம்.!  - Seithipunal
Seithipunal


கேரளாவில் உள்ள சபரிமலையில் உலக புகழ் பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இதில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். 

கார்த்திகை மாதத்தில் இந்த நடை திறக்கப்படும் நிலையில் பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாலை அணிந்து, விரதம் இருந்,து இருமுடி கட்டி ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்ய சபரிமலைக்கு செல்வார்கள். 

கடந்த சில வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்து இருந்தது. மேலும், சில நாட்களில் இங்கு பக்தர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து தடைகளையும் தாண்டி கொரோனா குறைந்துவிட்ட காரணத்தால், பக்தர்களின் கூட்டமானது அதிகப்படியாக இருக்கிறது. 

சன்னிதானம் செல்வதற்கு நான்கு பாதைகளும் திறந்து விடப்பட்டுள்ளது. நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றது. எனவே, பக்தர்கள் சிரமம் இல்லாமல் சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு கோயிலின் வருமானமானது 9.92 கோடியாக இருந்தது. 

ஆனால், நடை திறந்த 12 நாட்களுக்குள் 52 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட ஐந்து மடங்கு சபரிமலை கோவிலின் வருமானமானது, அதிகரித்துள்ளதாக தேவசம் போர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுவரை 7 லட்சம் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலில் தரிசனம் செய்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sabarimala income for last 12 days 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->