ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கு.. தமிழக அரசின் மேல்முறையீடு மார்ச்17ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் "உளவுத்துறை அளித்த தகவலின் படி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக உள்ள அரங்கில் கூட்டமாக நடத்தும் படி அறிவுறுத்தப்பட்டது. இது மாநில சட்ட ஒழுங்கு தொடர்பானது ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளாமல் பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவேதான் உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு தடை கோருகிறோம்.

பேரணியை அனுமதிப்பது என்பது மிகவும் நுட்பமான விஷயம் என்பதால் முடிவெடுக்கும் முழு அதிகாரமும் மாநில அரசுக்கு உள்ளது. பேரணியை முழுமையாக தடை செய்யவில்லை மாறாக நிலைமையை கருத்தில் கொண்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான பிரச்சினைகள் உள்ள இடங்களில் பேரணி என்பது மறுக்கப்பட்டது. இது ஒரு அமைப்பு சார்ந்த பிரச்சனை கிடையாது ஒட்டுமொத்த மாநில சார்ந்த விவகாரம் ஆகும். உளவுத்துறையின் அறிக்கைகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். ஆனால் அவர்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை.

கோவை வெடிகுண்டு தாக்குதல், பி.எஃப்.ஐ அமைப்பு தடை உள்ளிட்ட விவகாரங்கள் எல்லாம் அவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளவில்லை" என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "தமிழக அரசு கூறும் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று ஒன்று கிடையாது. பி.எஃப்.ஐ அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. அவர்களால் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று தமிழக அரசு நினைக்கலாம்.

ஆனால் தமிழக அரசு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமே தவிர பேரணியை நிறுத்தக்கூடாது" என வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றநீதிபதி நாளை மறுநாள் பேரணி நடத்துவது குறித்து ஆர்எஸ்.எஸ் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நாளை மறுநாள் (மார்ச்-5) நடைபெற இருந்த பேரணியை ஒத்திவைப்பதாக ஆர்எஸ்எஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் பேரணி எங்கெல்லாம் நடத்த அனுமதி வழங்கலாம் என்பது தொடர்பான விரிவான அறிக்கையை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS rally TNgovt appeal case adjourned to March 17


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->