ரவுடி பேபி பாடலுக்கு பாட்டியின் ரவுசு ஆட்டம்.. ஆச்சரியத்தில் திகைத்து போன ஆளுநர் மாளிகை.!! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் நடிப்பில், கதாநாயகியாக நடிகை சாய்பல்லவி நடிக்க வெளியான திரைப்படம் மாரி 2. மாரி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் உலகளவில் மெகா ஹிட்டடித்தது. 

தற்போது வரை இந்த பாடலை பல கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு கழித்துள்ள நிலையில், தற்போது புதுச்சேரி மாநில ஆளுநர் பதிவு செய்துள்ள வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தை போலவே புதுச்சேரி மாநிலத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வேலையில், இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர். 

இந்த விழாவின் போது அங்கிருந்த வயதை பாட்டி ஒருவர் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடும் காட்சியை கண்ட அம்மாநில ஆளுநர் கிரண் பேடி வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rowdy baby song dance by old lady in puthuchery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->