RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...! இன்னும் வங்கிக்கு திரும்பாத ரூ.6,266 கோடி 2000 ரூபாய் நோட்டுகள்..!
RBI Rs 6266 crore 2000 rupee notes still not returned to banks
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதாக என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டன. இதில் 2000 ரூபாய் நோட்டை ஏழை மக்கள் அதை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது அரிதானதாக இருந்தது.இந்நிலையில் தான், கடந்த 2023ஆம் அண்டு மே மாதம் 19ஆம் தேதி 2000 ரூபாய் திரும்பப் பெறப்படும் என RBI அறிவித்தது.
மேலும் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தவர்கள் அதை வங்கிகளில் செலுத்தி, அதற்குப் பதிலாக மாற்றுப் பணம் பெற்றுக்கொண்டனர்.
இதன் காலக்கெடு முடிந்த நிலையில்,RBI அலுவலகங்கள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என RBI தெரிவித்துள்ளது.இந்நிலையில் 2023ஆம் ஆண்டு 19ஆம் தேதி வரை ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்தன.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை ரூ.6,266 கோடி இன்னும் வங்கிக்கு திரும்பாமல் வெளியில் உள்ளது என RBI தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
RBI Rs 6266 crore 2000 rupee notes still not returned to banks