ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி.! - Seithipunal
Seithipunal


இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகளுக்கு கடன் வழங்கும் குறுகிய கால வட்டி விகிதத்தை இன்று 0.35 சதவீதம் அதிகரித்து இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

இந்த உயர்வின் மூலம், ரெப்போ விகிதம் 6.25% ஆக உயர்ந்துள்ளது. இது முன்பு 5.9% ஆக இருந்தது. அதே சமயம் நிலையான வைப்பு வசதி(SDF) விகிதம் இப்போது 6% ஆக உள்ளது. இதற்கு முன்பு 5.65% ஆக இருந்தது.

அதிகரித்து வரும் உலகப் பொருளாதாரக் கவலைகளுக்கு மத்தியில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ரெப்போ விகிதங்களை உயர்த்துவதற்கான முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை ஐந்து முறை ரெப்போ விகிதங்களை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI hikes repo interest rate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->