மத்திய அரசுக்கு 2021-22 நிதியாண்டு உபரித் தொகை ரூ.30 ஆயிரத்து 307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு.! - Seithipunal
Seithipunal


மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி இந்திய அரசின் கருவூலமாகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு மட்டுமில்லாமல் நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும்,  வங்கிகளை ஒழுங்குபடுத்தும், பணியையும் செய்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அண்ணிய முதலீடுகள், பணம் அச்சிடுதல், வணிகச் சந்தையை மேற்கொள்ளுதல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு உபரி தொகையை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்குவது நடைமுறையாக உள்ளது.

கடந்த 20-21 நிதியாண்டில் ரூ.99 ஆயிரத்து 122 கோடி உபரி தொகையாக மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியிருந்த நிலையில், இந்த முறை 2021-22 நிதி ஆண்டில் கிடைத்த உபரி தொகையான ரூ.30 ஆயிரத்து 307 கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த தொகையானது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாக இருந்த போதிலும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்திய அரசுக்கு ஒரு பக்க பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI gives surplus amount to central government


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->