இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.! - Seithipunal
Seithipunal


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட  'சூரத்' மற்றும் 'உதயகிரி' ஆகிய இரண்டு போர்க்கப்பல்களை மும்பையில் உள்ள மசகான் கப்பல்துறையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி  வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு போர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் துவக்கி வைக்கப் படுவது இதுவே முதல் முறை.

இந்த இரண்டு போர்க் கப்பல்களும் மும்பை மஜ்காவ் டாக் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாகும். 

அவற்றில் சூரத்' என்பது சூரத் 15பி டெஸ்டிராயர் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட நான்காவது கப்பலாகும். இது குஜராத்தின் வணிக தலைநகரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது .

 மேலும் உதயகிரி என்பது ப்ராஜெக்ட் 17A போர்க் கப்பல்களின் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மூன்றாவது கப்பல் ஆகும். இந்த கப்பலுக்கு ஆந்திராவின் மலைச்சிகரமான உதய்கிரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதை இரு கப்பல்களிலும் பிளாட்பாரம் நிர்வாக திட்டம், நவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் இருப்பதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajnathsingh launched two indigenously built warships


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->