#BREAKING : வேகமாக பரவும் கொரோனா .. மாநில முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் சமீப காலமாக கொரோனா பரவி வருகின்றன. அந்த வகையில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோன பாதிப்பு கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது. 

எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

இதனிடையே சமீபத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தி மத்திய அரசு அவசர கடிதம் எழுதியிருந்தது.

சமீப காலமாக கொரோனா தொற்று அதிகரித்தாலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளதாகவும் மருத்துவர்கள் பரிந்துரையின்படி அடுத்த சில நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan CM Ashok Gehlot affected covid positive


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->