இந்தியாவில் ரயில்நிலையங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம். ! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு கொச்சி மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில்  அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்  , இந்தியாவின் 75-வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்களுக்கு கொச்சி மெட்ரோ தயாராகி உள்ளது என்றும்,  இதற்காக  பல்வேறு ரெயில் நிலையங்களிலும்  நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்றும்  தெரிவித்து உள்ளது. 

சுதந்திர திருநாள் என்னும் அமுதப்பெருவிழாவை சரியான முறையில் கொண்டாடுவதற்காக, பயண சுதந்திர சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன்படி, எந்தவொரு நபரும் கொச்சி மெட்ரோ ரெயிலில் ரூ.10 கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்ளலாம்.

இவ்விழாவையொட்டி , அனைத்து  மெட்ரோ ரெயில் நிலையத்திலும் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையில் ரூ.10 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம் என்றும்  எவ்வளவு தொலைவு வேண்டுமென்றாலும் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொச்சி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் லோக்நாத் பெஹரா முட்டம் பகுதியில் உள்ள ஓ.சி.சி. கட்டிடத்தில் இன்று தேசிய கொடியை ஏற்றினார். இதேபோன்று ரெயில் நிலையங்களில் நாட்டுப்பற்று பாடல்கள், நடனங்கள் உள்ளிட்டவற்றை பள்ளி மாணவர்கள் வழங்கினார்கள் .

 பிளாஸ்டிக்கில் இருந்து விடுதலைக்கான பிரசாரத்தின்படி, 10 ஆயிரம் பருத்தியினால் ஆன பைகள் பயணிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளன. இதுதவிர, மேஜிக் ஷோக்கள் மற்றும் கராத்தே போட்டிகளையும் நடத்தி பள்ளி மாணவர்கள், ரெயில் பயணிகளை மகிழ்விக்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

railway independents day celebration 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->