ராகுல் காந்தி கேரள முதல்வருக்கு திடீர் கடிதம்! நடந்தது  என்ன? - Seithipunal
Seithipunal


கேரளா, வயநாட்டில் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில், காட்டு யானை தாக்கி வயநாட்டைச் சேர்ந்தவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். வனவிலங்குகள், குறிப்பாக யானை தாக்குதலால் வயநாட்டு மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

காடுகளை ஒட்டி வாழ்பவர்கள் எப்பொழுதும் அச்சத்தில் உள்ளனர். நாங்கள் மீண்டும் மீண்டும் மனித வனவிலங்கு மோதல் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பி உள்ளோம். 

மேலும் வயநாட்டில் இதுபோன்ற தாக்குதல்களை தணிக்க விவசாயிகளை பாதுகாக்க உங்களது தலையீட்டை கோருகிறோம். 

இந்த சிக்கலை சமாளிக்க விரிவான செயல் திட்டம் இல்லாதது இன்னும் மோசமாகிவிட்டது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi letter to Kerala Chief Minister 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->