பாராளுமன்றத்திற்கு நாய்க்குட்டியுடன் வந்த ராஜ்யசபா எம்பி; ஆதரவு தெரிவித்துள்ள ராகுல் காந்தி..!
Rahul Gandhi has expressed support for a Rajya Sabha MP who came to Parliament with a puppy
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று, காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியான ரேணுகா சவுத்ரி காரில் பாராளுமன்றத்திற்கு வந்த போது நாய்க்குட்டி ஒன்றை உடன் அழைத்து வந்தார்.
பின்னர் அதை காரில் வீட்டுக்கு அனுப்பினர். ரேணுகா சவுத்ரியின் இந்த செயல் பாராளுமன்றத்தையும், எம்பிக்களையும் அவமதிப்பதாக பாஜவினர் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்த ரோணுகா சவுத்ரி கூறியதாவது: இதில் என்ன மரபு மீறப்பட்டது. தெருநாய்களை கொண்டு வரக்கடாது என சட்டம் ஏதாவது இருக்கிறதா..? பாராளுமன்றம் வரும் வழியில் விபத்து நடந்த இடத்தில் இந்த நாய்க்குட்டியைப் பார்த்தேன். அடிபட்டு விடுமோ என்ற அச்சத்தில் அதை மீட்டு என் காருக்குள் வைத்து பாராளுமன்றத்தில் அழைத்து வந்தேன். பின் அதை வீட்டுக்கு அனுப்பி விட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், ரேணுா சவுத்ரியின் இந்த செயல் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
''நாய்கள் குறித்த பிரச்சினைதான் இன்று முக்கிய விவாதமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அந்த நாய் என்ன செய்தது. இங்கு நாய் அனுமதிக்கப்படவில்லையா..? அது உள்ளே அனுமதிக்கப்படுகிறது. ஒரு வேளை செல்லப்பிராணிகள் இங்கு அனுமதிக்கப்படாமல் இருக்கலாம். இந்த நாட்களில் இந்தியா விவாதிக்கும் முக்கியமான விஷயமாக இது தான் இருக்கும் என நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
English Summary
Rahul Gandhi has expressed support for a Rajya Sabha MP who came to Parliament with a puppy