தீபாவளி பண்டிகை || வேட்டி சேலைக்கு பதில் ரூ. 500 - புதுச்சேரி மாநில அரசு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


அடுத்த வாரம் திங்கள்கிழமை வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில அரசு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரிவைச் சார்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகளுக்கு பதில் ரூ. 500 வழங்க அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, ஒவ்வொரு அட்டையில் உள்ள 18 வயது நிரம்பிய 1,25,732 நபர்களுக்கு இலவச வேட்டி சேலைகளுக்கு பதிலாக அவர்களது வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தப்பட உள்ளது.

இதில் 57,868 ஆண்கள் மற்றும், 67,864 பெண்கள் உள்ளனர். நபர் ஒன்றுக்கு தலா ரூ.500/- என்ற வீதத்தில் ரூ.6,28,66,000/- செலுத்தப்பட உள்ளது.

மேற்படி இந்த பணம் செலுத்தும் பணி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில், போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நல மந்திரி சந்திர பிரியங்கா அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthuchery deepavali festival rupees 500 for family card


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->