தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல்? - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற வைத்தியலிங்கம் எம்.பி, கூட்டணி கட்சித் தலைவரும் முதலமைச்சரான மு.க. ஸ்டாலினை நேற்று முன்தினம் சென்னை அறிவாலயத்தில் சந்தித்தார். 

அவருடன் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் மற்றும் காங்கிரசார் உடன் இருந்தனர். 

புதுச்சேரி அரசியல் கட்சி தலைவர்கள் வழக்கமாக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்கும் போது அந்த கட்சியின் தலைவர்கள் மூலம் அனுமதி பெற்று சந்திப்பது தான் வழக்கம். 

ஆனால் இந்த சந்திப்பில் தி.மு.க அமைப்பாளரும் அக்கட்சி நிர்வாகிகளும் உடன் இல்லை. நேரடியாகவே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இடம் ஒதுக்கி அறிவாலயத்தில் சந்தித்துள்ளனர். 

காங்கிரஸ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி என்ற இடத்தை இழந்தது. 

அதே சமயத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தி.மு.க 6 எம்.பிக்கள் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் உறவு தொடராததால் காங்கிரஸ் சார்பில் கூட்டணி கட்சி கூட்டத்திற்கு அழைத்த போது காங்கிரஸ் அலுவலகத்திற்கு வர முடியாது என தி.மு.க பதிலளித்தது. 

இதனால் கூட்டணி கட்சி கூட்டம் ஹோட்டல்களிலோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலோ நடைபெற்று வருகிறது. இது புதுச்சேரி காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் புதுச்சேரி காங்கிரஸ், தி.மு.க அமைப்பாளரை புறக்கணித்துவிட்டு நேரடியாக தமிழக முதல்வரை சந்தித்துள்ளனர். இது புதுச்சேரி தி.மு.க அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry sudden rift DMK Congress alliance


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->