அக்கா திருமணத்திற்கு வந்த தங்கைக்கு நேர்ந்த சோகம்! பெற்றோர் அளித்த பரபரப்பு புகார் ! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, தேவாநகரைச் சேர்ந்தவர் அமிர்தமுருகன் புஷ்கரன். இவரது மனைவி லலிதா (வயது 50) இவர்கள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். 

இவர்களுக்கு விக்னேஷ்வரி (வயது 29), காவியா (வயது 22) என்ற 2 மகள்கள் உள்ளனர். காவ்யா பிரான்சில் மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். 

மூத்த மகள் விக்னேஷ்வரிக்கு கடந்த மாதம் புதுச்சேரியில் திருமணம் நடைபெற்றது. அக்கா திருமணத்திற்காக புதுச்சேரிக்கு காவ்யா வந்திருந்தார். 

இந்நிலையில் காவியா கடைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வெளியே சென்று பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. 

இதனால் காவியாவின் பெற்றோர் இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் காவியாவை தக்ககுட்டையை சேர்ந்த அஜித் என்ற வாலிபர் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry student kidnapped complaint against youth


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->