குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்.. முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்துள்ளார்.

கடந்த  சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2022-2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டைங தாக்கல் செய்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அறிவிப்பு தொடர்பான ஆவணங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து புதுச்சேரி அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudhuchery CM launched the scheme of giving Rs.1000 per month to the heads of the family


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->