பத்து லட்சம் பேருக்கு 21 நீதிபதிகள் - மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


பத்து லட்சம் பேருக்கு 21 நீதிபதிகள் என்ற விகிதத்தில் நீதிபதிகள் -பொதுமக்கள் விகிதாச்சாரம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜு எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள பதிலில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்கள் தொகை-நீதிபதிகள் விகிதம் கணக்கிடப்படுகிறது என்றும், அதன்படி, கடந்த 2011 -ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 21.03 நீதிபதிகள் என்ற விகிதத்தில் நீதிபதிகள் பணியில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீதிபதி பணியிடங்களை பொருத்தவரை, உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதி பணியிடங்களும், நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 1,098 நீதிபதி பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

நிலுவை வழக்குகளை பொறுத்தவரை, அவற்றிற்கு விரைந்து தீர்வு காண, விரைவு நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும், இவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 1,800 விரைவு நீதிமன்றங்களை நாடு முழுவதும் அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. கடந்த உயர்நீதிமன்றங்கள் அளித்த தகவல்படி, கடந்த டிசம்பர் மாதம் வரை 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 898 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும் அந்த பதிலில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public Judges Ratio


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->