புதிய வந்தே பாரத் ரயில் சேவை: 04 வழித்தடத்தில் தொடக்கம்: நவம்பர் 08-இல் கொடியசைத்து வைக்கும் பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (நவம்பர்-08) நான்கு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கவுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு செல்லும் ஒரு ரயிலும் அடக்கம். தமிழக நகரங்கள் வழியே இந்த ரயில் செல்லவுள்ளது.

இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, குறித்த வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மேலும் புதிதாக 04 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில் சேவையைகளை  பிரதமர் மோடி நாளை மறுநாள்  (நவம்பர்-08) கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

புதிய நான்கு வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் விபரம் கீழே:

01. எர்ணாகுளம் - பெங்களூரு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு வரை இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த வழித்தடத்தில் பயண நேரம் 08 மணி நேரம் 40 நிமிடங்களாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த வந்தே பாரத் ரயிலானது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்லவுள்ளது. இரண்டு முக்கிய ஐடி மற்றும் வர்த்தக மையங்களை இணைப்பதால், வல்லுநர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பயன்பெறுவதுடன் தமிழகம், கேரளா, கர்நாடகாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இந்த ரயில் சேவை இருக்கும்.

02. பனாரஸ் - கஜூராகோ

உ.பி.,யின் பனாரஸ் நகரில் இருந்து ம.பி.,யின் கஜூராகோ இடையே இயக்கப்படவுள்ளது. வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூடம் வழியே பயணிக்கிறது. இது மதம் சார்ந்த மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில், யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட கஜூராகோவுக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள் விரைவாக செல்ல முடிவதுடன், நவீன மற்றும் சொகுசுசான பயணத்தை உணர முடியும்.

03. லக்னோ - ஷஹாரான்பூர்

உத்தர பிரதேசத்தின் ஷஹாரான்பூர் முதல் லக்னோ இடையிலான இந்த வந்தே பாரத் ரயிலால் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இந்த ரயிலானது லக்னோ, சீதாபூர், ஷாஜஹான்பூர், பைரேலி, மொராதாபாத், பிஜ்னூர் நகரங்களில் நின்று செல்லும். இதன்பால், ரூர்கி வழியாக ஹரித்வார் செல்பவர்களுக்கு பெரிதும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், உ.பி.,யின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளை இணைப்பதில் இந்த ரயிலுக்கு முக்கிய பங்குண்டு.

04. பிரோஸ்பூர் - டில்லி

பஞ்சாபின் பிரோஸ்பூர் - டில்லி இடையே இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் இரு நகரங்கள் இடையிலான பயண நேரம் 06 மணி 40 நிமிடமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில் இருந்து பஞ்சாபின் பதின்டா, பாட்டியாலா நகரங்களுக்கான இணைப்பு பலம் பெறும். வர்த்தகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi to flag off new Vande Bharat Train Service Route 04 on November 8th


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->