இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எப்படி பணியாற்ற வேண்டும் - குடியரசுத்தலைவர் முர்மு அறிவுரை.! - Seithipunal
Seithipunal


ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் ''அரசின் வளர்ச்சி திட்டங்களின் வெற்றி என்பது ,அது அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்று சேருவதில் தான் உள்ளது. மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள  இதை உணர்ந்து செயல்பட வேண்டும்,'' என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்ட, 175 பேர், தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உதவி செயலர்களாக பணியாற்றி வரும் நிலையில், நேற்று இவர்கள் ஜனாதிபதி மாளிகையில், குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை, சந்தித்தனர். அப்போது அவர் சில அறிவுரைகளை வழங்கினார்.  

குடியரசுத்தலைவர் முர்மு, இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூறியதாவது:

இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாகிய நீங்கள், அரசின் எந்த ஒரு நலத் திட்டமாக இருந்தாலும், அதனுடைய வெற்றி, அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதில் தான் உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் அரசின் நலத் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

இதில் நீங்கள், உணர்வுப் பூர்வமாகவும், உளவுப்பூர்வமாகவும் பணியாற்ற வேண்டும். அரசின் திட்டங்கள், சமூக நலப் பணிகள் குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும்  தெரியப்படுத்தி, அதன் பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எதிர்வரும் 2047ல் நாட்டின் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ள அந்த நேரத்தில், நீங்கள் மூத்த அதிகாரிகளாக இருப்பீர்கள். அப்போது நாடு எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை இந்த, 25 ஆண்டுகளில் உருவாக்கிட வேண்டும். என்று அவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Murmu advise to young IAS officers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->