13 மணிநேரமாக பிரசவ வலியால் துடிதுடித்த பெண்மணி.. மருத்துவமனைகளின் மனிதநேயமற்ற செயல்...!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள நொய்டா - காசியாபாத் எல்லைப் பகுதியில் இருக்கும் போடா காலனி பகுதியை சேர்ந்தவர் விஜேந்தர் சிங் (வயது 30). இவரது மனைவியின் பெயர் நீலம் (வயது 30). நீலம் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். 

இவர் டெல்லி அருகே இருக்கும் நொய்டா தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது மருத்துவ ஆலோசனையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நீலத்திற்கு பிரசவ வலியானது ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவசர ஊர்தியின் மூலமாக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு படுக்கை இல்லை என்று கூறி அனுமதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்து சுமார் 13 மணி நேரம் கழித்து நீலம் பிரசவ வேதனையில், அவசர ஊர்தியில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவமானது உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து நீலத்தின் கணவர் விஜேந்தர் சிங் கூறிய சமயத்தில், அங்கு உள்ள நொய்டா, கௌதம புத்தா நகர், வைசாலி, காசியாபாத் என்று ஒவ்வொரு மருத்துவமனையாக நாங்கள் சென்றோம். 

இவற்றில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என 8 மருத்துவமனைகள் அடங்கும். ஆனால் படுக்கை வசதி இல்லை என்று கூறி அனைத்து மருத்துவமனைகளிலும் திருப்பி அனுப்பிவிட்டனர். இறுதியாக நொய்டா அரசு மருத்துவமனை வாயிலில் அவசர ஊர்தியிலேயே எனது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காத காரணத்தால் ஏற்பட்ட இரண்டாவது உயிரிழப்பாக அம்மாநிலத்தில் இது இருக்கிறது. கடந்த மாதம் 25 ஆம் தேதி மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்து சிகிச்சை கிடைக்காமல் ஒரு பச்சிளம் குழந்தை ஏற்கனவே உயிர் இழந்ததும், தற்போது இந்த உயிரிழப்பு அரங்கேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant girl died after 13 hours search hospital for delivery in Delhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal