மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கொலை: ஓட்டுனருக்கு போலீசார் வலைவீச்சு! - Seithipunal
Seithipunal


 

பீகார், ஜமூய் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கடத்திய மணல் டிராக்டரை மடக்கி பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக ஜமூய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருப்பதாவது, கார்ஹி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்படி போலீசார் சாதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சோதனை சாவடியில் மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்றை நிற்காமல் காவல் ஆய்வாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி இருவரையும் மோதியது.

இதில் இரண்டு காவலர்களும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவலர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவல் ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இந்த சம்பவத்தில் டிராக்டர் ஓட்டுனர் அருகே அமர்ந்திருந்தவர் கைது செய்யப்பட்டு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிராக்டர் ஓட்டுனர் மற்றும் அவரது கூட்டாளி தப்பி சென்று விட்டதால் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் சட்டவிரோதம் மணல் கடத்தும் பகுதிகளில் சோதனை செய்தபோது 2 பெண் போலீஸ் உள்பட 3 பேரை கடத்தல் கும்பல் தாக்கினர். 

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தும் கும்பல் போலீசார் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police inspector tried stop sand smuggling killed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->