இளம்பெண் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் - குற்றவாளிகளை சுட்டு பிடிக்கும் போலீசார்.! - Seithipunal
Seithipunal


உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், பகிரங்கமான குற்றங்களுக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்துமாறு காவல்துறைக்கு சுதந்திரம் தந்துள்ளார். இதையடுத்து போலீஸார் சமூகத்தில் அச்சமின்றி குற்றங்களை நிகழ்த்துவோருக்கு எதிராக அதிரடியாக என்கவுன்டர்களை நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில், காஸியாபாத் பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான குற்றத்தில், போலீசார் இரண்டு ஆண்களை சுட்டுப் பிடித்துள்ளனர். காசியாபாத் நகரில் கடந்த வியாழக்கிழமை இளம்பெண் ஒருவர் தன்னுடன் ஒன்றாக பணிபுரியும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் நண்பர்களுடன் சென்ற போது 2 நண்பர்களும், அவருக்கு ஸ்கூட்டி ஓட்ட பழக உதவி செய்து வந்தனர். 

இதனை மறைந்திருந்து கண்காணித்து வந்த மர்ம நபர்கள் தனிமையில் சிக்கிய அந்த பெண்ணை தாக்கி அருகிலிருந்த கட்டிடத்துக்கு கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்தப் புகாரின் படி போலீஸார், தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டு ஜூனைத் என்ற நபரை துப்பாக்கியால் முழங்காலுக்கு கீழே சுட்டு மடக்கினர். அவனிடம் மேற்கண்ட விசாரணை மூலம் மேலும் இரண்டு நபர்களை என்கவுன்டர் நடத்தி பிடித்துள்ளனர். அவர்களை சிறையில் தள்ளிய போலீஸார், தலைமறைவாக இருக்கும் மேலும் இரண்டு நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police enounter to youths for harassment case in uttar pradesh


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->