ஒரே ஒரு பாட்டிலால் ஒட்டுமொத்த குடும்பமும் மருத்துவமனையில்!! திடுக்கிடும் சம்பவம்!!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள யாதகிரி மாவட்டத்தில் உள்ள சுரபுரா தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம் முதனூரு. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் கென்னம்மா., இவரது மகனின் பெயர் மவுனேஷ். இவர் அந்த பகுதியின் கவுன்சிலராக பணியாற்றி வருகிறார். 

நேற்று முன்தினம் இவரகளத்து இல்லத்தில் வந்த போது விநியோக குடிநீரை பிடித்த அவர் அதனை அருந்தியுள்ளார்., அந்த நீரை குடித்த அவருக்கு சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் வயிற்று வலியால் துடிக்கவே., இதனை கண்ட குடும்பத்தார்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில்., அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ்., தாயம்மா போன்ற நான்கு பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டு அவர்க்களும்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்., இவர்கள் அனைவரும் பொது விநியோக குடிநீரை அருந்திய பின்னரே வாந்தி மற்றும் வயிற்று வலிக்கு உள்ளான தகவல் தெரிந்த நிலையில்., இந்த தகவலானது ஊர் முழுக்க தெரியவந்தது. 

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக அந்த கிராமத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த அதிகாரிகள் வந்து சோதனை செய்த போது நீரில் விஷம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. 

இதனை அறிந்த கிராம மக்கள் தொட்டியில் இருந்து பிடித்த குடிநீரை யாரும் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்., மேலும்., குளத்திற்குள் விஷத்தை கலந்து யார் என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.   

இந்த விஷயம் குறித்து தகவலறிந்த முதல்வர் குமாரசாமி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு., சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 
 

English Summary

poison mixed in drinking water


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal