அத்துமீறிய சீனா! இன்று மாலை பிரதமர் தலைமையில் முக்கிய கூட்டம்! வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


கிழக்கு எல்லைப் பகுதியின் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில், இந்தியா - சீனா இடையே கடந்த மூன்று மாதங்களாக ஒரு பதட்ட நிலை நீடித்து வருகிறது. ஐந்து இடங்களில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைய முயற்சி செய்த போது, அவற்றை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி முறியடித்து இருக்கிறார்கள். 

அப்படி ஒரு மோதலின் போது ஒரு ரத்தக்களறி ஏற்பட்டு இரு தரப்பிலும் உயிரிழப்பு கூட ஏற்படும் இதைத்தொடர்ந்து இராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அந்த படைகளை விலக்கிக் கொள்வது, ஏற்கனவே இருந்த நிலையை மீட்டமைப்பது என்றும் உடன்பாடு எட்டப்பட்டது. 

இதற்கிடையே, கடந்த 7ஆம் தேதி அன்று இந்தியாவினுடைய முன்கள பகுதியை நோக்கி சீன ராணுவத்தினர் முன்னேறி வர முயற்சி செய்துள்ளனர். மேலும், சீன ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, இந்திய இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி தங்களை அச்சுறுத்துவதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியது.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து இந்திய இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "இந்திய தரப்பு ஒருபோதும் எல்லை மீறி சென்றதில்லை. அதேபோல துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ஆத்திரமூட்டும் எந்த நடவடிக்கைகளிலும் இதுவரை ஈடுபட்டது இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவுடனான எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் இன்று மாலை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எல்லையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi meeting for china india border issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->