பிரதமர் மோடி 5 வது முறையாக கர்நாடகா வருகை! எப்போது தெரியுமா?
PM Modi Karnataka visit
கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கும் 2 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் நாளை 14 தொகுதிகளிலும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வருகின்ற மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே நான்கு முறை கர்நாடகாவில் பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் மீண்டும் ஐந்தாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 28ஆம் தேதி கர்நாடகா செல்ல உள்ளார். மதியம் 1 மணி அளவில் தாவணகெரே தொகுதி பா.ஜ.க வேட்பாளர் மற்றும் ஹாவேரி தொகுதி பாஜக வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து நடைபெற உள்ள பிரதமர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.