காங்கிரஸ் காங்கிரஸ் அறிக்கையை களங்கப்படுத்திய பிரதமர் -  ப.சிதம்பரம் தாக்கு! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தாக்கியும் இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. 

அதற்கு காங்கிரஸ் இந்திய கூட்டணி கட்சிகள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர், 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் ஆதரித்த கருத்துகளை மோடிகள் சுட்டிக்காட்ட முடியுமா. அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் ஏழைகள் உள்ளனர். 

அவர்களுக்கு நீதி வழங்கும் திட்டங்கள் காங்கிரஸ் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தமிழகத்தின் தொலைதூர கிராமங்களை சென்றடைந்துள்ளது. நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ளது.

பா.ஜ.க தேர்தல் அறிக்கை இரண்டு மணி நேரத்தில் சுவடு தெரியாமல் காணாமல் போனது. மோடியின் கேரண்டி அரசியல் கட்சியின் அறிக்கையாக இருக்க முடியாது. 

எனவே அவர் காங்கிரஸ் அறிக்கையை பார்த்து பொறாமைப்படுகிறார். எனவே பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை களங்கப்படுத்துகிறார் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi appeasement congress manifesto


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->