செல்லுங்கள், வெல்லுங்கள்.! ஆனால்...  - பிரதமர் மோடி மந்திரிகளுக்கு அட்வைஸ்.! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

இதனால் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் தொடர்பான பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தி பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். 

இதற்கிடையே வேட்பாளர்களை தேர்வு செய்தல் போன்ற கட்சி பணிகளிலும் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்கிறார். இந்நிலையில் நேற்று மத்திய மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரிகளை பார்த்து, 'செல்லுங்கள் வெல்லுங்கள் விரைவில் மீண்டும் சந்திப்போம்' என தெரிவித்துள்ளார். 

மேலும் ,எந்த ஒரு தேர்தல் அறிக்கை விடும்போது கவனம் தேவை. தவறாக எதுவும் தெரிவித்து விடாதீர்கள். தற்போது டீப் ஃபேக் உள்ளதால் இரண்டு வித்தியாசங்களில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். 

நமது திட்டங்கள் தொடர்பாக பேசும்போது சர்ச்சைக்குரிய அறிக்கைகளை தவிர்க்க வேண்டும். ஜூன் மாதம் நாம் தாக்கல் செய்யக்கூடிய முழு பட்ஜெட்டில் விக்சித் பாரத் தொடர்பாக முழு பார்வையையும் தெரியவரும் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi advice to ministers


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->