விளம்பரத்தால் போட்டியிடும் பெப்சி - கோகோ கோலா - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நாட்டில் பிரபல குளிர்பானங்களான பெப்சி மற்றும் கோகோ கோலா இடையே நீண்ட காலமாகவே போட்டி இருந்து வருகிறது. இரு நிறுவனங்களும் விளம்பரங்கள் மூலம் முன்புள்ள காலங்களில் மோதிக்கொண்டன.

இந்த இரு நிறுவனங்களின் மோதலை பலரும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்து வருவதை முன்னிட்டு மீண்டும் பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனம் விளம்பர போரை தொடங்கியுள்ளது. 

2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை முன்னிட்டு 'HALF TIME' என்ற வாசகத்துடன் கோகோ கோலா விளம்பரம் செய்து வருகிறது. இதற்கு இடைவேளைகளில் கோகோ கோலா அருந்துங்கள் என்பதே அர்த்தம். 

இந்த நிலையில் கோகோ கோலா நிறுவனத்தின் விளம்பரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெப்சி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதாவது 'Anytime is Pepsi Time' என்ற விளம்பர யுக்தியை முன்னெடுத்துள்ளது.

இந்த விளம்பரம் இடைவேளை வரை எதற்கு காத்திருக்கிறீர்கள், எந்த நேரமும் பெப்சி குடிக்கும் நேரம்தான் என்று உணர்த்துகிறது. பல காலங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய இந்த விளம்பர யுத்தம் இணையத்தில் பலரின் கவனம் ஈர்த்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pepsi and coco cola company advertisement launch for championship trophy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->