திருமணமாகாத ஆண்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம்.. மாநில முதலமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஹரியானா மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன் காரணமாக திருமணத்திற்கு பல மாநிலங்களில் பெண் கிடைக்காமல் இளைஞர்கள் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர். அதன்படி அரியானா மாநிலத்தில் நிறைய இளைஞர்கள் 40 வயதை கடந்த நிலையிலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

அதற்குக் காரணம் ஹரியானா மாநிலத்தில் ஆண் பெண் பாலின விகிதத்தில் பெண்கள் குறைவாக உள்ளனர். அதன்படி கடந்த 2001 ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 756 பெண்கள் இருந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு பாலின விகிதம் 899 ஆக அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி அரியானாவில் 1000 ஆண்களுக்கு 917 பெண்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதியவர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதைப் போல திருமணமாகாதவர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி கர்னாலில் உள்ள கலம்புரா கிராமத்தில் நடைபெற்ற ஜன் சம்பத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியதாவது, 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணமாகாத நபர்களுக்கு விரைவில் ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pension for unmarried boys in Hariyana


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->