#இமாச்சல் || பியாஸ் நதி வெள்ளத்தில் காணாமல் போன பாண்டோ பாலம்.!! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் மாநிலம் குலு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நதிக்கரையில் உள்ள வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. 

இமாச்சல் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக குலு பள்ளத்தாக்கின் பியாஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாண்டோ அணையில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளதால் நதியின் குறுக்கே அமைந்துள்ள பெரும்பாலான பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 

இதனால் வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க முடியாமல் பேரிடர் மீட்பு குழுவினர் திணறி வருகின்றனர். அந்த வகையில் பியாஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த வரலாற்று சிறப்பு மிக்க பாண்டோ பாலம் வெள்ளப்பெருக்கில் இடிந்து விழுந்தது. பாண்டோ பாலம் இடிந்து விழும் காட்சி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pandoh bridge washed away by beas river


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->