நெல்லை பாஜக பிரமுகர் கொலை - பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


நெல்லை பாஜக பிரமுகர் கொலை - பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் இடைநீக்கம்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அருகே மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். பாஜக  மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளரான இவரை கடந்த 30-ந்தேதி இரவு மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. 

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதனால், பாளையங்கோட்டை போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். 

இருப்பினும், ஜெகன் கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. பிரமுகர் பிரபுவை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

அதன் படி போலீசார் நேற்று முன்தினம் பிரபுவை கைது செய்தனர். இந்த நிலையில், நெல்லையில் பாஜக பிரமுகர் ஜெகன் கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக நெல்லை மாவட்ட பொறுப்பு காவல் ஆணையர் பிரவேஷ் குமார், கொலையை தடுக்க தவறியதாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியனை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palaiyangottai unspector suspend for nellai bjp excetive murder case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->