இதற்க்கு பா.ஜ.க அரசால் தீர்வு காண முடியாது... - ப சிதம்பரம் காட்டம்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசால் மட்டுமே வேலை இல்லா திண்டாட்டத்தை சரி செய்ய முடியும் என மத்திய அரசின் தலைமை பொருளாதாரம் ஆலோசகர் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், அனைத்து சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கும் அரசு மட்டுமே தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறான ஒன்று. 

தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை சரி செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்து இருந்தார். 

இது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருப்பதாவது, வேலையில்லாமல் பிரச்சனைக்கு அரசால் தீர்வு காண இயலாது என அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் தெரிவித்திருக்கிறார். 

இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது பா.ஜ.க அரசின் கையாலாகாத தன்மையை காட்டுகிறது. பா.ஜ.க அரசால் முடியாது என்றால் நாற்காலியை காலி செய் என்று நாம் குரல் உயர்த்தி சொல்ல வேண்டும். 

வேலையில்லா பிரச்சனைக்கு பல தீர்வுகள் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளை குறித்து விளக்கமாக சொல்லி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

p Chidambaram speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->